கேக் விலை குறைக்கப்படும்?
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபாவிற்கு பேக்கரிகளுக்கு வழங்கினால்இ கேக் உற்பத்திகளின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாண் உட்பட ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்கும் சாத்தியம் இல்லை எனவும் அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் ஒரு கிலோ கேக் 1200 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை தொழில்துறையினருக்கு 30 ரூபா விலையில் வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று தெரிவித்தார்.
அவிசாவளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்கிடையில், உள்ளூர் சந்தையில் முட்டை விலை உயர்விற்கு தீர்வாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 200,000 முட்டைகளை ஏற்றிக்கொண்டு கப்பல் நேற்று சனிக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்துள்ளது.
