இலங்கை கடனில் இருந்து விடுபட பொதுவான கட்டமைப்பை ஏற்படுத்துங்கள் – IMF வலியுறுத்தல்

அதிக வெளிநாட்டுக் கடன் சுமை காரணமாக இலங்கை பொருளாதார மந்தநிலையை நோக்கிச் செல்வதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக நேற்று சனிக்கிழமை சர்வதேச நாணயநிதியம் இலங்கையில் கடனைத் தீர்ப்பதற்கான பொதுவான கட்டமைப்பை ஏற்படுத்துவது கட்டாயம் என்று அறிவித்துள்ளது.

ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்க, ‘நேரம் மற்றும் முறையான செயல்முறைகள்’ தேவை என்றும் நிதியம்  தெரிவிக்கின்றது

ஜி20 உச்சிமாநாட்டில் மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் நிதி அமைச்சர்கள் கூட்டம் முடிவடைந்த பிறகு,  IMF இந்த அறிவிப்பை வெளியிட்டது

IMF நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, கடன் தீர்க்கும் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை   பாராட்டினார்.

இது இலங்கையின் பொருளாதாரத்தின் மீள் எழுச்சி என்று கூறப்படுகிறது.