கஞ்சா வாங்கியவருக்கு பிணை : விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் அக்கரைப்பற்று-காதிரிய்யா பீச் ரோட் இல- 246 இல் வசித்து வருபவரும் ரொட்டவெவ- மிரிஸ்வெவ பகுதியில் திருமணமான சித்திக் முஹம்மட் முஸைப் (21வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த கஞ்சா போதை பொருளை குடிப்பதற்காக கொண்டு சென்ற இளைஞரொருவரை பிணையில் செல்வதற்கு திருகோணமலை நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு கட்டளையிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் இன்று  திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியகையில்  ஹொரவ்பொத்தானை- றத்மலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் மிரிஸ்வெவ பகுதியிலிருந்து கஞ்சா போதை பொருளை வாங்கிச் செல்லும்போது ரொட்டவெவ பொலிஸ் சோதனை சாவடியில் குறித்த இளைஞரை சோதனை இட்டபோது அவரிடமிருந்து 1000 மில்லி கிரேம் கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதே வேளை குறித்த இளைஞரை பொலிஸார் விசாரணை செய்தபோது மிரிஸ்வெவ பகுதியிலுள்ள இளைஞரொருவர் தனக்கு பனை மரத்திற்கு கீழே இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா போதை பொருளை எடுத்து தந்ததாகவும் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து மொரவெவ பொலிஸார் அங்கு விரைந்து சோதனையிட்டபோது விற்பனைக்காக சிறியளவில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப் பொருட்களை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.