சவேந்திர சில்வா மீது விசாரணை அறிக்கை

கடந்த ஆண்டு மே மாதம் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்கு அப்போதைய பதில் பாதுகாப்பு பணிக்குழாமின் தலைவராகவும் இராணுவ தளபதிபதியாகவும் பணியாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா தமது கடமையை ஆற்றத் தவறியதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வன்முறைச் சம்பவத்தின் போது ஆயுதப் படைகள் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட தலைமையில் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

விசாரணைக் குழுவினால் தயாரிக்கப்பட்ட குறித்த அறிக்கை நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட நீதிபேரானை மனு மேன்முறையீட்டு நீதிமன்றால் அழைக்கப்பட்டது.

இதன்போதுஇ அட்மிரல் வசந்த கரன்னாகொட சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா நீதிமன்றில் இந்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, காவல்துறை மாஅதிபர் சி.டி.விக்கிரமரத்ன அல்லது வேறு பிரதிவாதிகள், முன்னாள் ஜனாதிபதியின் கட்டளைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்பதை கண்டறிய விசாரணைகளை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபேரானை மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த சந்தர்ப்பங்களின் போது, கொழும்பு நகர எல்லைக்குள் பல்வேறு இடங்களில் சிறப்புப் படைகள் மற்றும் கட்டளை தளபதிகள் சேர்ந்த ஐந்து படைப்பிரிவுகள் உட்பட 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பணிகளில் இருந்ததாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்