போகாகும்புர பொலிஸாரினால் ஜேர்மன் நாட்டு பிரஜை கைது
-பதுளை நிருபர்-
பொரலந்தையில் இருந்து போகாகும்புர வீதி 12 ஆவது மைல் கல்லுக்கு அருகே ஜேர்மன் நாட்டு பிரஜை ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டியினால் மற்றுமொரு ஒரு முச்சக்கர வண்டியில் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இதன்போது ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய பிரஜை காயங்களுக்கு உள்ளான நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஜேர்மன் நாட்டை பிரஜை போகாகும்புர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை இன்று சனிக்கிழமை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போகாகும்புர பொலிஸார் தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.