துருக்கி – சிரியா நிலநடுக்கம்: 171 பேருக்கு பிடியாணை!

தெற்கு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் தொடர்பில் துருக்கி அரசு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதன்படி, உறுதியற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் கட்டடங்களை கட்டியதாக கட்டட ஒப்பந்தக்காரர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்டட ஒப்பந்தக்காரர்கள் உட்பட 171 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 171 பேரும் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 43,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இதனால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு காணாமல் போனோரை தேடுவதற்காக, பல நாட்கள் நடைபெற்ற மீட்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.