வாகன விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு
இந்தியா – ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ராம்நகர் மற்றும் வெங்கடேஸ்வரா பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ரஞ்சித் மற்றும் கோகுல், இவர்கள் இருவரும் முதுகுளத்தூர் வீதியில் முச்சக்கர வண்டியில் பரமக்குடி நோக்கி சென்றுள்ளனர்.
இந்நிலையில், முச்சக்கர வண்டி பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி என்ற கிராமத்தின் வீதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இதில் கோகுல் மற்றும் ரஞ்சித் ஆகிய 2 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு நோயாளர் காவு வண்டி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து எமனேஸ்வரன் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.