பெண் தோட்டத் தொழிலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகம்
கென்யாவில் அந்த நாட்டு நாடாளுமன்றம்: தேயிலைத் தோட்டங்களில், பெண் தொழிலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
தங்களது தோட்ட முகாமையாளர்களால் 70 இற்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவலுக்கமைய இவ் உத்தரவு இடப்பட்டுள்ளது.
பி.பி.சியின் சிறப்பு ஆவணப்படம் ஒன்றில், குறித்த பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று முகாமையாளர்களும், இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.