Last updated on April 28th, 2023 at 05:12 pm

85,072 பேர் கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பம்

85,072 பேர் கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பம்

85,072 இளைஞர்கள் இவ்வருடம் நடைபெறவுள்ள 7 ஆவது கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் கொரிய மொழித் தேர்வில் தோற்றிய சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டையை விநியோகிக்கும் பணியை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆரம்பித்துள்ளது.

அதன்படி 13,000 இற்கும் அதிகமான இளைஞர்கள் பரீட்சை அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

உற்பத்தித் துறையில் பணிகளுக்கான கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதியும், மீன்பிடித் தொழில் வேலைகளுக்கான பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.