
பதுளை பொது வைத்தியசாலையில் பணி பகிஸ்கரிப்பு
-பதுளை நிருபர்-
சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்று வியாழக்கிழமை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி, பதுளை பொது வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
வரிவிதிப்பு , மருந்து தட்டுப்பாடு, ஊழியர் பற்றாக்குறை ஆகியவற்றை முன்வைத்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
