சீனா ஆர்ட்டிக் பகுதிகளையும் கண்கானிக்கின்றதா?

கனடா இராணுவம் , ஆர்க்டிக் பகுதியில் சீனாவின் கண்காணிப்பு முயற்சிகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

தி குளோப் அண்ட் மெயில் என்கிற கனேடிய செய்தித்தாள் முதன்முதலில் அறிவித்த இந்த கண்டுபிடிப்பு,  வடக்கில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

சந்தேகத்திற்குரிய சீன உளவு பலூன் அமெரிக்க மற்றும் கனேடிய வான்வெளியில் பறந்த நிலையில், அமெரிக்க இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதன் பின்னர் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு கனேடிய தேர்தல்களில் சீனா தலையிடுவதாகவும் சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கனடா இராணுவம் வான்,  நிலம் மற்றும் கடலை கண்காணிப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுததல்கள் எவை என அடையாளம் காணும் பணியினை முன்னெடுத்து வருகின்றது.

கனேடிய வான்வெளி மற்றும் கடல் அணுகுமுறைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனாவின் சமீபத்திய முயற்சிகள் பற்றி இராணுவம் முழுமையாக அறிந்துள்ளதாக கனடாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்