இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 40 பேருந்துகள்
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட மேலும் 40 பேருந்துகள் பயணிகள் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹோமாகம – பனாகொடவில் அமைந்துள்ள சிலோன் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபையிடம் கையளிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இதுவரை 165 பேருந்துகள் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் கிராமப்புறங்களில் பொது போக்குவரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு 500 பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.