இலத்திரனியல் தராசுகளை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பொகவந்தலாவ கொட்டியாகல தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக, தேயிலை கொழுந்துகளை எடைபோடுவதற்கு இலத்திரனியல் தராசு பாவனையை நீக்குமாறு கோரி தோட்ட தொழிலாளர்கள் குழுவொன்று இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலத்திரனியல் தராசு பயன்படுத்தி தேயிலையை எடை போடுவதன் மூலம் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.