ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை ஆராய நிபுணர்கள் குழு

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஐவர் அடங்கிய மருத்துவக் குழுவின் உறுப்பினர்கள் வெளிப்படைத் தன்மையுடன் நியமிக்கப்படுவார்கள், என எதிர்பார்ப்பதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று புதன்கிழமை  நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டபோதே நீதவான் இவ்வாறு தெரிவித்தார்.

அதனையடுத்து, இந்தக் குழுவின் நியமனத்தின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக இந்த விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அழைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.