கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா அறிவித்தல்

-யாழ் நிருபர்-

வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற கூட்டுத்திருப்பலி பெருவிழாவுக்கு 8,000 இலங்கை, இந்திய பக்தர்கள் வருகைக்கான எதிர்பார்ப்பு

வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற கூட்டுத்திருப்பலி, எதிர்வரும் மாதம் 03, 04இஆம் திகதிகளில் நடாத்துவதற்கு சகல ஒமுங்குகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

இவ் திருவிழாவுக்கு இந்திய, இலங்கை ஆகிய நாட்டுகளில் இருந்து 8,000 பக்தர்கள் வருகை தருவதற்கான அனுமதி வழங்கப்படுயிருக்கின்றன.

வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற கூட்டுத் திருப்பலி, எதிர்வரும் மாதம் 03,04 ஆம் திகதியில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகவியாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு இன்று
யாழ். மாவட்ட செயலகத்தில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.

அதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

பக்தர்கள் பயணத்தினை மேற்கொள்ளுவதற்கான பிரயாண ஒழுங்குகளும் புங்குடுதீவு, குறிகட்டுவானில் இருந்தும், நெடுந்தீவில் இருந்தும் மேற்கொள்ளுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுயிருக்கின்றன.

இந்த புங்குடுதீவு, குறிகட்டுவானில் இருந்தும் தரைவழி மார்க்கமாக பேரூந்துக்கள் 03.03.காலை 05 மணி தொடக்கம் முற்பகல் 10.00 மணிவரை அரச, தனியார் பஸ் பேரூந்துக்கள் குறிகட்டுவான் வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

கச்சதீவுக்கான படகுச் சேவைகள் முற்பகல் 06.00 மணியில் இருந்து 11 மணிவரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும். இதற்கான தனி ஒருவருக்கு இருவழிபயணமாக 2,000 ரூபாவும், நெடுந்தீவில் இருந்து செல்பவர்களுக்கு 1500 ரூபாவும் படகுச்சேவைக்கான கட்டணமாக காணப்படுகின்றது. இவை படகு உரிமையாளர்கள் சங்கத்தின் மூலமாக இவ் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிமாவட்டங்களில் இருந்து தத்தமது படகுகள் ஊடாக கச்சதீவு அந்தோனியார் ஆலய கூட்டுத்திருப்பலி உற்சவத்திற்கு செல்லமுடியும்.அவ்வாறு செல்வர்கள் அருகில் உள்ள கடற்படையினரிடம் தொடர்பு கொண்டு அதற்கான அனுமதி பெற்று எதிர்வரும் 03.03 அன்று பிற்பகல் 06 மணிக்கு முன்பதாக கச்சதீவினை வந்தடைய எற்றவாறு பயணங்கள் இடம்பெறயுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையினால் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. 03.03 ஆம் திகதி வருபவர்கள் இரவு உணவினை பக்தர்கள் தயாரிக்கவேண்டும்.

04.03 அன்று புனித கச்சதீவு அந்தோனியாரின் கூட்டுத்திருப்பலி அன்று காலை இலங்கை கடற்படையினரிடம் வழங்குவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாளுக்குமான கச்சதீவு அந்தோனியாரின் பயணம் யாத்திரை தலமாகவும் நோக்கம் வந்து ஆராதனையாக இருப்பதாலும் எவறும் மது, எனைய போதைப்பொருள் என்பவை எடுத்து செல்லுவது தடைசெய்யப்பட்ட பொருட்களாக காணப்படுகின்றது என்றார்.

பக்தர்களின் நலன் கருதி ஒரு வாரத்திற்கு முன்பு மலேரியா நுளம்பு தாக்கம் இல்லாது ஒழிக்க சுகாதார திணைக்கள வைத்திய அதிகாரிகள் விஜயம் செய்து புகையூட்டல் செய்தும் வந்துள்ளனர்.