
கியூஆர் (QR) நடைமுறை மிகவிரைவில் நீக்கப்படும் ? -அமைச்சர் காஞ்சன-
தேசிய எரிபொருள் கடவுச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் குறியீட்டு முறையானது இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச் செய்யப்படுவதாகவும், சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ந்து எரிபொருளை வழங்க முடியும் எனவும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில கலந்து கொண்டு கருத்து தெரிவித்த காஞ்சன, எரிபொருள் நிர்வாகத்திற்கான தற்காலிக தீர்வாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதாக வலியுறுத்தினார்.
“சர்வதேச எரிபொருள் விலையின்படி, உள்ளூர் எரிபொருள் விலை ரூ.10 அல்லது ரூ.15 ஆகலாம், ஆனால் உக்ரைனில் இதே நிலை ஏற்பட்டாலோ அல்லது சர்வதேச எரிபொருள் விலை வேகமாக உயர்ந்தாலோ என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ’ என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஞசு குறியீடு நீக்கப்பட்டதன் மூலம், மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் சர்வதேச விநியோகஸ்தர்களை நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC மற்றும் லங்கா ஓஐசி (LIOC ) ஆகிய இரண்டுமே நாட்டின் பிரதான எரிபொருள் விநியோகஸ்தர்களாக எங்களிடம் உள்ளன” என்று காஞ்சன தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்துடன் க்யூஆர் குறியீட்டு முறையின்படி வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் செயல்முறை கடந்த ஜூலை 25, 2022 தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக அமைச்சு முறைமையை மறுசீரமைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
