
பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கி வைப்பு
மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் 2001,2004 ஆண்டில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டதுடன் வீடும் புணருத்தாரணம் செய்து வழங்கப்பட்டது.
தங்களுடன் கல்வி கற்று நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக உயிர் நீத்த சக மாணவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி வந்தாறுமூலை எழுச்சி கிராமம் பலாச்சோலையில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே இவ் மனிதநேய உதவி வழங்கப்பட்டது.
விறகு வியாபாரம் செய்வதற்கு துவிச்சக்கர வண்டியும் வெள்ளம் காரணமாக வீட்டில் வசிக்க முடியாமல் துன்பமடைந்த குடும்பம் ஒன்றுக்கு வீட்டினை புனருத்தாரணம் செய்ததுடன் வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் முன்னால் கோட்டை கல்வி பணிப்பாளர் அ. சுகுமார் பதிவாளர் திருமதி த. பஞ்சாட்சரம் உலகலாம் நூலாசிரியர் கலாநிதி ந.பிரதீபன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
