
விரைவில் QR முறை நீக்கப்படும் : எரிபொருள் வழங்கல் வழமைக்கு திரும்பும்
எரிபொருளுக்கான தற்போதைய QR முறை அடுத்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைகாட்சி ஒன்றின் அரசியல் பேச்சு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,
நாட்டின் பொருளாதார நிலை முன்னேற்றத்துடன் போதியளவு எரிபொருள் விநியோகத்தை வழங்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் மூன்று மாதங்களின் பின்னர் மக்கள் தமக்கு தேவையான எரிபொருளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து முன்பிருந்தவாறு பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சர் தெரிவித்தார்.
