
ஒப்பந்த அடிப்படையில் கிராமஉத்தியோகத்தர் கொலை : பிரதான சந்தேகநபர் கைது
அம்பன்பொல பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் மாத்தளை – உக்குவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பன்பொல – கைலகம பகுதியைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
காணி தகராறு ஒன்றின் அடிப்படையில் ரயில்வே திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஒருவரினால் 5 இலட்சம் ரூபா பெறுமதிக்கு இந்தக் கொலை ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்தப் பணத்தில் இருந்து 80,000 ரூபாவை எடுத்துக்கொண்டு கொலைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட நாள் முதல் குறித்த நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதோடு, சந்தேக நபர் மாத்தளையில் உள்ள கடையொன்றில் பணிபுரிபவர் எனத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று செவ்வாய்க்கிழமை ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
இக்கொலை தொடர்பாக ஒப்பந்தம் கொடுத்தவர் உட்பட மூவர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தனர்
