
5 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு
-யாழ் நிருபர்-
சுழிபுரம் – தொல்புரம் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு பிரிவு வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போது, வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் உமாபதி வேண்டுகோளுக்கு இணங்க, சுழிபுரத்தினை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸினை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா வரதராஜா மற்றும் அவர்களது குடும்பத்தின் 5 இலட்சம் ரூபா நிதிப் பங்களிப்பில் மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், குறித்த வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி, நன்கொடையாளர்கள், வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர், வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான உமாபதி, ஜெயந்தன், வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்.
