
வர்த்தகரை கடத்தி 70 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய ஐவர்
கிராண்ட்பாஸ் பகுதியில் வர்த்தகர் ஒருவரை கடத்தி கப்பம் கோரிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திச்சென்று 70 இலட்சம் ரூபாய் பணம் கப்பமாக பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில் வர்த்தகரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வானின் உரிமையாளரை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர்கள் வத்தளையில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 70 இலட்சம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
