காதலனால் கொல்லப்பட்ட திருமணமான இளம் பெண்
இந்தியாவில் – ராஜஸ்தானின் நாகவுரில் உள்ள பலாசார் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் குட்டி(புரனனi) கடந்த மாதம் தாய் வீட்டிற்கு வந்த நிலையில், ஜனவரி 20ஆம் திகதி அன்று கணவர் வீட்டிற்கு செல்வதாகக் கூறி அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஆனால், அவர் அங்கு செல்லவில்லை, அவரது தொலைபேசியும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் பெற்றோர் மற்றும் கணவர் வீட்டார் பொலிஸ்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந் நிலையில் ஜனவரி 28ஆம் திகதி அன்று நாகவுரில் உள்ள மால்வா வீதியில் குறித்த பெண்ணின் உடைகள், தலை முடி, உடலின் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொலிஸார் கொலை வழக்கு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போது தான் அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த அனோப்ராம் என்ற நபருக்கும் ஏற்கனவே காதல் இருந்துள்ளது. குறித்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணமான பின்பும் காதல் தொடர்ந்துள்ளது. அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தனது காதலனை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்றும் கணவர் வீட்டிற்கு செல்வதாகக் கூறி அவர், காதலனை பார்க்க சென்றுள்ளார்.அப்போது திருமணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் குறித்த பெண்ணை கொலை செய்த அனோப்ராம், அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி கிணறு உள்ளிட்ட பல இடங்களில் வீசியுள்ளார். கொலையாளி அனோப்ராமை கைது செய்த பொலிஸார் வீசப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை மீட்க தீவிரமாக விசாரணை நடாத்தி வருகின்றனர்.