ஸ்டோபரி பழங்களின் நன்மை

உங்களது உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளில் ஸ்ட்ரோபெரி பழங்களும் ஒன்று என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிக ஊட்டச்சத்து இருப்பதால் அந்த பழங்களை அவ்வப்போது எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இப் பழம் சுவையாக இருப்பது மட்டுமின்றி நீர்ச்சத்தை ஈடு செய்ய உதவுவதோடு தோல் வறட்சியை போக்கும் என்றும் செல் அழிவை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

அத்தோடு ஸ்ட்ராபெரி பழத்தில் ஆண்டி ஆக்சிடென்ட் பொருள்கள் அதிகம் இருப்பதால் புற்றுநோயை உருவாக்கும் செல்கள்  ரத்தத்தில் கலப்பதை தடுக்கிறது என்றும் ஸ்டாபெரி பழங்களில் விட்டமின் C அதிகம் இருப்பதால் உடலுக்கு நன்மை என்றும் கூறப்படுகிறது.

முகத்தில் தோன்றும் பரு மற்றும் வடுக்களை தடுக்கவும் ஸ்ட்ராபெர்ரி சிறப்பான மருந்து என்று கூறப்படுகிறது.

இப் பழத்தை நேரடியாக சாப்பிட்டால் ஏராளமான பலன்கள் உண்டு என்றும் ஸ்ட்ரோபெரி பழத்தில் இருந்து எடுக்கப்படும் நறுமண பொருட்கள் சாக்லேட் கேக் ஐஸ்கிரீம் ஆகியவற்றிலும் கலந்து சாப்பிடலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.