பேருந்து – ரயில் மோதி விபத்து

-கிளிநொச்சி நிருபர்-

பேருந்தின் மீது புகையிரதம் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி அறிவியல் நகர் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று திங்கட்கிழமை காலை 8.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றி பயணித்த அரச பேருந்துஇ புதையிரத கடவையை கடக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த யாழ் ராணி புகையிரதம் மோதியுள்ளது.

விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் சாரதியும், நடத்துனரும் மற்றும் ஒரு பெண்ணும் இருந்துள்ளனர்

தூக்கிவீசப்பட்ட பேருந்து, வீதியில் தரித்து நின்ற பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பொறியியல் பீட பீடாதிபதியினுடைய வாகனத்தை மோதி நின்றதில் குறித்த வாகனம் சேதமடைந்துள்ளது.

அதன்போது தரித்து நின்ற குறித்த வாகனத்தின் உள்ளே பீடாதிபதியும் சாரதியும் இருந்துள்ளனர் எனினும் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்கள்

கிளிநொச்சியை அடையும் தருவாயில் புகையிரதம் வேகம் குறைந்து வந்தமையால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.