ஐ போனுக்காக கொலை செய்த இளைஞன் கைது

இந்தியாவில் – கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான ஹேமந்த் தத் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒன்லைன் மூலம் இரண்டாம் பாவனையாளராக ஐபோன் ஒன்றை ஓர்டர் செய்துள்ளார்.

இவரது தாயும், சகோதரியும் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், ஹேமந்த் தத் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி அன்று இவர் ஆர்டர் செய்த செல்போனை ஹேமந்த் நாயக் என்ற டெலிவரி பாய் டெலிவரி செய்ய எடுத்து வந்துள்ளார்.

தனக்கு வந்த பார்சலை வாங்கிக்கொண்டு இளைஞர், வீட்டிற்குள் இருங்கள் பணம் எடுத்து வருகிறேன் என டெலிவரி பாய் நாயக்கை வீட்டிற்குள் அழைத்துள்ளார்.

நாயக் உள்ளே சென்று பணத்திற்காக காத்திருந்த நிலையில், பணம் எடுத்து வர சென்ற ஹேமந்த் சமையல் அறைக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து டெலிவரி பாய் நாயக்கை குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது உடலை வீட்டு பாத்ரூமில் இரண்டு நாட்கள் சாக்குப்பையில் கட்டி வைத்துள்ளார். பின்னர் உடல் துர்நாற்றம் வீசத் தொடங்கியதால், சாக்குப்பையில் இருந்த உடலை தனது வாகனத்தில் எடுத்து சென்று வீட்டின் அருகே உள்ள வெற்றிடமான இடத்தில் வைத்து பெட்ரோல் உற்றி எரித்துள்ளார்.

ஹேமந்த்தை சிசிடிவி ஆதாரங்கள் அடிப்படையில் கர்நாடகா பொலிஸார் கைது செய்துள்ளதுள்ளனர்.

உடலை வாகனத்தில் எடுத்து சென்றமை,  பெட்ரோல் வாங்கிய, காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அதன் அடிப்படையில் இளைஞரை கர்நாடகா பொலிஸார் கைது செய்துள்ளனர் . விசாரணையில் இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.