
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை
மொரட்டுவ அகலான பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், உக்குன் என அழைக்கப்படும் சுதிர சம்பத் என்ற 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
அவரது உறவினரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவர் தற்போது லுனாவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலைசெய்யப்பட்ட இளைஞன் அங்குலானையில் உள்ள தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் கூரிய ஆயுதங்களுடன் வந்து தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
