
தனியார் களஞ்சியசாலையில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற குழு கைது
பமுனுகம – உஸ்வதகேயாவ பிரதேசத்தில் உள்ள தனியார் களஞ்சியசாலையில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அண்மையில் குறித்த களஞ்சியசாலையின் பாதுகாவலரை கூரிய ஆயுதத்தால் தாக்கி சாரதி ஒருவருடன் சேர்த்து அறையொன்றில் அடைத்து வைத்து விட்டு இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 5 கார்களை பயன்படுத்தி கடையில் இருந்த பொருட்களை திருடியுள்ளனர்.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இவ்வாறு திருடிச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் குளியாப்பிட்டிய மற்றும் கொழும்பை வசிப்பிடமாக கொண்ட 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
