உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மேலதிக முடிவுகள் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மேலதிக முடிவுகள் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் வழங்குவதில் உள்ள தடை தொடர்பில் பொது திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை நேற்று வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளன.