
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நிதியுதவியை அனுமதிப்பது தொடர்பில் பரிசீலனை
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நிதியுதவியை சீனாவின் கடன் மறுசீரமைப்பு இல்லாவிட்டாலும் அனுமதிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக புலும்பேர்க் தகவல் செய்தி வெளியிட்டுள்ளது.
கடும் நிபந்தனைகளுடன் இலங்கைக்கு கடன் உதவிகளை சர்வதேச நாணய நிதியம் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கான நிதியுதவியை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம், அதன் கடன்கொடுனர்களில் இருந்து மறுசீரமைப்புக்களை எதிர்பார்த்திருந்தது.
எனினும் இந்தியா ஜப்பான் மற்றும் தனியார் பிணையாளிகள் கூட 15 வருட கடன் மறுசீரமைப்பு மற்றும் 10 வருட கடன் ரத்து என்ற கொள்கைக்கு இணங்கிய நிலையில் சீனா இரண்டு வருட கடன் ரத்துக்கு அப்பால் செல்ல மறுத்ததுள்ளது.
அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெல்லன் எதிர்வரும் வாரத்தில் இந்தியாவில் ஜி20 நாடுகளின் கலந்துரையாடலில் பங்கு கொள்கிறார்.
இதன்போது நெருக்கடியான நாடுகளுக்கான கடனுதவிகளை தடுக்கும் நிலைகளை தவிர்ப்பதற்கான செயற்பாடுகளை அமெரிக்கா எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை மையப்படுத்தியே எதிர்வரும் மார்ச் மாதத்தில் சர்வதேசய நாணய நிதியத்தின் நிதியுதவியை எதிர்ப்பார்க்கலாம் என்று தெரிவித்து வருகிறார்.
