மின் இணைப்புக்கள் வழங்குவதில் தடை
நாடளாவிய ரீதியில் 36,000 மின் இணைப்புக்களை வழங்க முடியாதுள்ளதாக இலங்கை மின்சார சபை தகவல்களை வழங்கியுள்ளது.
இந் நிலை ஏற்படக்காரணம், மின் விநியோகத்துக்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, வங்கிகளில் நாணயக் கடிதங்கள் விடுவிக்கப்படாமையே, என மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும், பொதுமக்கள் கோரியுள்ள 36,000 மின் இணைப்புகளும், கைத்தொழில் துறைக்கான 1,200 மின் இணைப்புகளும் வழங்கப்படவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.
மின்பிறப்பாக்கி, வயர், மீற்றர் என்பனவற்றைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளது.இதன் காரணமாக, நாட்டுக்கு பாரிய நட்டம் ஏற்படும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.