
பணத்தகராறு காரணமாக 25 வயது இளைஞன் கொலை
அஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவிட்டிய வத்த பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 25 வயதுடைய அலுத்கெல்ல, அஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
பணத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை அஹலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
