துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி

மினுவாங்கொட – பொரகொடவத்தை – ருவான் மாவத்தை சந்தியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஆடியம்பலம் – பில்லவத்தை பகுதியைச் சேர்ந்த சந்து என்றழைக்கப்படும் பிரபாத் பிரியங்கர (30 வயது) என்பவரே நேற்று வியாழக்கிழமை இரவு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வீதிக்கு அருகில் மறைந்திருந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் எனவும், பல்வேறு குற்றச்சாட்டில் நீதிமன்றில் இருந்து பிணையில் வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.