வீதியில் பயணிப்போரிடம் உணவு கேட்கும் காட்டு யானைகள்
தம்புள்ளை முதல் ஹபரண வரையான வீதிப் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் வாகனங்களில் பயணிப்பவர்களிடம் உணவு கேட்கப் பழகியுள்ளதாகவும், உணவு வழங்காதமையால், சில தாக்குதல் சம்பவங்கள் அண்மையில் பதிவானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களில் பயணிப்போர், பாதுகாப்பற்ற முறையில் காட்டு யானைகளுக்கு உணவு வழங்குவதால், உயிராபத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம் என்றும், அது குறித்து வனஜீவராசிகள் திணைக்களம் இதுவரையில் அவதானம் செலுத்தவில்லை என்றும் பிரதேசவாசிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.