சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸார்

ஹபராதுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட உனவடுன பகுதியில் உள்ள வோட்டர் கேட் என்ற ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரிடமிருந்து 16,100 அமெரிக்க டொலர்கள், 195,000 ரஷ்ய ரூபிள் மற்றும் 200 யூரோக்களை திருடிய நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஹோட்டலின் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேடப்படும் சந்நேக நபரின் விபரங்கள்

பெயர் – சந்தன சமன் குமார
வசிப்பிடம் – தெள்ளம்புர வடக்கு – நாகியாதெனிய
தேசிய அடையாள அட்டை இலக்கம் – 198230601773
சுமார் 40 வயதுடையவர்

குறித்த சந்தேகநபர் பற்றிய தகவல் தெரிந்தால் 076-8477810 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உனவட்டுன பொலிஸ் சுற்றுலா பிரிவுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.