பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் பொலிஸாரிடம் இருந்து நீதிமன்றத்திற்கு கிடைத்த உத்தரவுக்கு அமைய, இந்த சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி மைக்கல் வீதியில் உள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அலுவலகத்திலும் இந்த சீல் வைக்கப்பட்டுள்ளது.