மகளிர் T20 உலகக்கிண்ணம் : இலங்கை – அவுஸ்திரேலியா மோதல்

மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் மற்றுமொரு போட்டி இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை தோற்கடித்து இலங்கை அணி இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.