தேர்தல் என்பது அரசாங்க செயற்பாடு – தேர்தல்கள் ஆணைக்குழு

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குப் பணம் வழங்குமாறு அரசாங்க அச்சகம் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவர்கள் அரசாங்க அச்சிடலை மேற்கொள்ள கடமைப்பட்டுள்ளனர் என்று மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தேர்தல் என்பது அரசாங்கச் செயற்பாடு என்பதால் அது தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவது அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்குக் கட்டாயம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.