மின்கட்டண உயர்வுக்கு அனுமதி

இலங்கை மின்சார சபை முன்வைத்த புதிய மின் கட்டண உயர்வு யோசனைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இம்மின் கட்டண உயர்வு இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றது

ஆணைக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இதற்கு இணங்கியதன் அடிப்படையில்  குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும்  மின் கட்டண திருத்தம் தொடர்பில்  பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் எந்தவொரு உத்தியோகப்பூர்வ தீர்மானமும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

66 சதவீத மின் கட்டண உயர்வு யோசனைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தமது இணக்கப்பாட்டை வெளியிடவில்லை.

முன்னதாக அவர்  36 சதவீத மின் கட்டண உயர்வுக்கே இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.