போதைபொருள் கலந்த சொக்லேட் கொடுத்து நண்பர்களுடன் இணைந்து காதலியை பலாத்காரம் செய்த காதலன்

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக, காதலன் ஒருவர் தனது காதலிக்கு போதைப்பொருள் கலந்த சொக்லேட்டை கொடுத்து இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் கிளிநொச்சி – பூநகரி பகுதியில் பதிவாகியுள்ளது.

14 வயது காதலியை 17 வயது காதலன் அழைத்து சொக்லேட் கொடுத்ததாகவும், அவர் மயக்கமடைந்த பின்னர், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் காதலன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் அப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடன் இணைந்து சிறுமியை வன்புணர்வு செய்த மற்றைய இரு இளைஞர்களும் பிரதான சந்தேக நபருடன் போதைப்பொருள் பாவனையாளர்கள் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.