படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் – மக்கள் போராட்டம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான மக்கள் போராட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப் போராட்டத்தில் பங்கு கொண்டு தங்களது ஆதரவையும் வழங்கி
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தலைவர்/ செயலாளர்,
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்.