
நாட்டில் பல இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவும்
நாட்டின் பல பகுதிகளில் இன்று புதன்கிழமை பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
