
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளம் பெண் பலி
கொழும்பு – தெமட்டகொட, சஹஸ்புர பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ,பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் இன்று இரவு திங்கட்கிழமை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது , வீட்டில் இருந்த 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
