நாளை அனைத்து தனியார் வகுப்புகளையும் மூடுமாறு கிண்ணியா நகர சபை உத்தரவு

-கிண்ணியா நிருபர்-

கிண்ணியா நகர சபை பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை அனைத்து தனியார் வகுப்புக்களையும் மூடுமாறு கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.நிவாஸ் தெரிவித்துள்ளார்.

நாளை காதலர் தினம் என்பதால் அனைத்து தனியார் வகுப்புக்களையும் பூட்டுமாறும் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம், ஜம்மியதுல் உலமா சபைக்கு அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக் கடிதத்தில் காதலர் தினம் என்பதனால் சமூக சீர்கேடுகளை தவிர்க்கவே இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.