பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் – ப.நெடுமாறன் பரபரப்பு தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் இந்தியப் பிரிவினர் பரப்பும் பொய்யான கருத்துக்களுக்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் என இந்திய ஊடகவியலாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பொய்யான அறிக்கைகளை வெளியிடுவது இலங்கையில் பல்வேறு சமூகங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் என இராதாகிருஷ்ணன் டுவிட்டர் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அவர் வெளிவருவார் என்றும் தமிழ் தேசிய இயக்கத்தின் (டி.என்.எம்) தலைவர் ப.நெடுமாறன் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்திய அரசியல்வாதி திடுக்கிடும் தகவலை வெளியிட்டதாக யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும், பிரபாகரன் நலமாக இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் நெடுமாறன் அங்கு தெரிவித்தார்.

பிரபாகரனின் இருப்பிடத்தை தன்னால் வெளியிட முடியாது என்று தெரிவித்த நெடுமாறன், விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் இன்று இந்த தகவலை வெளியிடுவதாக தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது பல்வேறு எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில், பிரபாகரன் விரைவில் பொது வெளியில் வருவதற்கு ஏதுவாக அமைந்திருப்பதாக நெடுமாறன் மேலும் தெரிவித்தார்.