அம்பிடிய சுமண ரத்ன தேரர் மீது துப்பாக்கிச்சூடு
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையின் தலைவர் அம்பிடிய சுமண ரத்ன தேரர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், துப்பாக்கிச் சூடு அவர் தங்கியிருந்த அறையைத் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தப்பியோடியுள்ள நிலையில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.