மகாசிவராத்திரியை முன்னிட்டு பாதயாத்திரை

யாழ். மாவட்ட சிவன் ஆன்மீக சபையின் எற்பாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை திருக்கேதீஸ்வர பாதயாத்திரை, செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரநாதரை நோக்கி அடியாா்கள் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது.

யாழ். மாவட்ட சிவன் ஆன்மீக சபையின் தலைவர் சீத்தாராமன் சிவமைந்தன், செயலாளர் வ.வாகீசன் மற்றும் யாழ். அறநெறி பாடசாலையின் மாணவர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.