மட்டக்களப்பு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற படகு விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 27 வயதுடைய தனியார் வகுப்பு ஆசிரியரும் , 16 வயதுடைய மூன்று மாணவர்களுமே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் களுவுந்தன்வெளியைச் சேர்ந்தவர்களான 27 வயதுடைய ஆசிரியரும் , தயாபரன் சஜித்தன் (வயது-16) வீரசிங்கம் விதுசன் (வயது-16) , சத்தியசீலன் தனு, (வயது16) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
போரதீவுபற்று களுவுந்தன்வெளி கஜமுகன் பாடசாலையில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 3 மாணவர்களும், 4 மாணவிகளும் மற்றும் ஆசிரியர் உட்பட இன்று காலை தாந்தாமலைக்கு சுற்றலா சென்று போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அதிபருடன் தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்ததாவது….
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாத்தாமலை நான்பது வட்டை மீனாடசியோடை குளத்தில் மூழ்கிய 3 மாணவர்கள், தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஆசிரியர் ஒருவர் உட்பட நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டடுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.