துருக்கி நிலநடுக்கம் : இலங்கை பெண் சடலமாக மீட்பு

துருக்கியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக , துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கலகெதர பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வயோதிப பெண்னே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலத்தை அவரது மகள் அடையாளம் காட்டியுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

கலகெதர பகுதியை சேர்ந்த இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் துருக்கியில் வந்து குடியேறியதாக தெரியவருகின்றது.