வெவ்வேறு விபத்துகளில் 14 வயது சிறுமி உட்பட மூவர் பலி
இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் 14 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை கட்டுகஸ்தோட்டை, நாவலதென்ன – ஜம்புகஹாபிட்டிய வீதியில் மஹவ சந்திக்கு அருகில் வேன் ஒன்று மோதியதில் ஆண் ஒருவரும் அவரது மகளும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையும் குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். பொல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடைய நபரும் அவரது 14 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வத்தளை ஹெந்தல – எலகந்த வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
ஹெந்தல, பள்ளியாவத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.