
மண்ணெண்ணெய் குடித்து குழந்தை உயிரிழப்பு
மண்ணெண்ணெய் குடித்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 02 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தை வீட்டில் வைக்கப்பட்டிருந்த கலனில் இருந்த மண்ணெண்ணெய்யை குடித்ததாக குழந்தையின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
மண்ணெண்ணெய் குடித்த குழந்தை வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது
